விசாரணை கைதி திடீர் சாவு


விசாரணை கைதி திடீர் சாவு
x

நெல்லையில் விசாரணை கைதி திடீரென இறந்தார்.

திருநெல்வேலி

தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் பொன்னம்மாள் தெருவைச் சேர்ந்தவர் மந்திரமூர்த்தி (வயது 48). இவர் கடந்த 2019-ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, கரிவலம்வந்தநல்லூர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். பின்னர் அவர் நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி மந்திரமூர்த்திக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவருக்கு சிறையில் உள்ள மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தொடர்ந்து கடந்த 19-ந்தேதி மந்திரமூர்த்திக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மந்திரமூர்த்தி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story