புதுக்கோட்டை சிறையில் விசாரணை கைதி திடீர் மரணம்


புதுக்கோட்டை சிறையில் விசாரணை கைதி திடீர் மரணம்
x

புதுக்கோட்டை சிறையில் விசாரணை கைதியாக இருந்த சின்னத்துரை என்பவர் இன்று மரணமடைந்தார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் பகுதியை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 53). இவர் அப்பகுதியில் பெட்டிக்க கடை வைத்து நடத்தி வந்தார்.

இந்த சூழலில் கடையில் புகையிலை பொருட்கள் வைத்து விற்பனை செய்ததாக சின்னத்துரையை நேற்று காரையூர் போலீசார் கைது செய்தனர். இதேபோல முருகப்பன் என்பவரையும் கைது செய்தனர். கைதானவர்கள் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்ட சின்னத்துரைக்கு இன்று மாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக சிறையில் இருந்து ஆம்புலன்சு மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிறைக்காவலர்கள் அழைத்து சென்றனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சின்னத்துரையை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவர் வரும் வழியிலேயே இறந்தது தெரிந்தது. இதையடுத்து அவரது உடல் பிரதே பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இது குறித்து புதுக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story