தொழிலாளி வீட்டில் திடீர் தீ விபத்து


தொழிலாளி வீட்டில் திடீர் தீ விபத்து
x

அஞ்செட்டி அருகே தொழிலாளி வீட்டில் திடீரென தீப்பிடித்தது.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

அஞ்செட்டி அருகே உள்ள கவுண்டர் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் பெரியநாயகம். கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி பாஸ்காமேரி மற்றும் மகன் ஆன்ட்ரோ ஆல்வின் கிறிஸ்துராஜ், மகள் திவ்யா ஆகியோருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டில் திடீரென தீப்பிடித்தது. இதையறிந்த பக்கத்து வீட்டில் வசித்து வரும் சகாயமேரி என்பவர் சத்தம் போட்டதால் பெரியநாயகம் தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்து வெளியேறி உயிர் தப்பினார். அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் வீடு முழுவதும் எரிந்து சேதமானது. இதனால் வீட்டில் இருந்த பணம் மற்றும் அரசு ஆவணங்கள், பட்டா, சிட்டா உள்ளிட்ட அனைத்தும் எரிந்து போனது மின்சார கம்பி உரசியதால் வீட்டில் தீப்பிடித்தது தெரியவந்தது. இது தொடர்பாக அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story