செல்போன் கோபுர மின்சார அறையில் திடீர் 'தீ'
கொள்ளிடத்தில் செல்போன் கோபுர மின்சார அறையில் திடீர் ‘தீ’ விபத்து
மயிலாடுதுறை
கொள்ளிடம்:
கொள்ளிடத்தில் உள்ள ஒரு செல்போன் கோபுரத்தின் அடிப்பாகத்தில் மின்சார அறை உள்ளது. இந்த அறையில் ஜெனரேட்டர் எந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு லேசான பழுது ஏற்பட்டு அதனை நீக்கும் முயற்சியில் அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெனரேட்டர் என்ஜினில் இருந்து திடீரென புகை வெளியேறி எரிய தொடங்கியது.
இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சீர்காழி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story