தென்னை நார் தொழிற்சாலையில் திடீர் தீ
தாடிக்கொம்பு அருகே, தென்னை நார் தொழிற்சாலையில் திடீரென தீப்பிடித்தது.
திண்டுக்கல்
தாடிக்கொம்பு முத்தாலம்மன் கோவில் அருகே, பிலிப் என்பவர் தென்னை நார் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு தென்னை மட்டையில் இருந்து தனியாக நார் பிரித்தெடுக்கப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று 30-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து கொண்டிருந்தனர். பகல் 11 மணி அளவில், தொழிற்சாலையில் திடீரென தீப்பிடித்தது. இதனைக்கண்ட தொழிலாளர்கள், அங்கிருந்து அலறிஅடித்தபடி வெளியேறினர். காற்று வீசியதால் சிறிது நேரத்தில் தீ மள, மளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் பல லட்சம் மதிப்புள்ள 200 டன் தென்னை நார் தீயில் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து, தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story