பர்கூர் அருகேகோழிப்பண்ணையில் திடீர் தீ
கிருஷ்ணகிரி
பர்கூர்
பர்கூர் அருகே சந்தலப்பள்ளியை சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை சின்ன சீமனூர் பகுதியில் உள்ளது. மஞ்சபுல் கொண்டு வையப்பட்ட கோழிப்பண்ணை தற்போது பயன்பாட்டில் இல்லை என கூறப்படுகிறது.இந்த கோழிப்பண்ணையில் நேற்று முன்தினம் மாலை திடீரென தீப்பிடித்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி உடனடியாக பர்கூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை அடித்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story