வடசென்னை அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
வடசென்னை அனல் மின் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
மீஞ்சூர்,
வடசென்னை அனல் மின் நிலையத்தில் முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகா வாட்டும், 2-வது யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட்டும் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தநிலையில் 2-வது யூனிட்டில் 2-வது அலகில் உள்ள ஜெனரேட்டரில் இருந்து டிரான்ஸ்பார்மருக்கு மின்சாரம் கடத்தப்பட்டு தேவையான அளவுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
மின் உற்பத்தி பாதிப்பு
இந்தநிலையில் ஜெனரேட்டரின் டிரான்ஸ்பார்மரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அனல் மின் நிலையத்தில் உள்ள தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை போராடி அணைத்தனர். இதனால் 2-வது யூனிட் 2-வது அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story