சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் மூடப்பட்டது


சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் மூடப்பட்டது
x

சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் மூடப்பட்டது

திருப்பூர்

பல்லடம்

பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையத்தில், சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், ஆறுமுத்தாம்பாளையத்திலிருந்து கரைப்புதூர் நோக்கிச் செல்லும் மெயின் ரோட்டில் பள்ளம் ஏற்பட்டது. இந்த திடீர் பள்ளத்தால் விபத்துக்கள் நேரும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்ததையடுத்து 'தினத்தந்தி'யில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இதனைப்பார்த்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பணியாளர்களை அழைத்து அந்த திடீர் பள்ளத்தை மூட அறிவுறுத்தினர். இதையடுத்து ஆறுமுத்தாம்பாளையம் ரோட்டில் ஏற்பட்ட திடீர் பள்ளம் மண்கொட்டி மூடப்பட்டது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் 'தினத்தந்தி' நாளிதழுக்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.



Next Story