கடைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
ஒடுகத்தூர் பேரூராட்சியில் உள்ள கடைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
வேலூர்
அணைக்கட்டு
அணைக்கட்டு தாலுகாவுக்கு உட்பட்ட ஒடுகத்தூர் பேரூராட்சியில் உள்ள ஒருசில கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தது. அதைத்தொடர்ந்து வேலூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் பானுமதி உத்தரவின்பேரில் ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் ராமலிங்கம் தலைமையில் ஆய்வாளர்கள் சரவணன், உமா, சீனிவாசன் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் நேற்று ஒடுகத்தூர், சந்தை மேடு, பழைய மருத்துவமனை, வேப்பங்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின்போது ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் 2 கடைகளுக்கு ரூ.500 வீதம் அபராதம் விதித்து வசூல் செய்தனர்.
Related Tags :
Next Story