தாலுகா அலுவலகத்தில் நில நிர்வாக ஆணையர் திடீர் ஆய்வு


தாலுகா அலுவலகத்தில் நில நிர்வாக ஆணையர் திடீர் ஆய்வு
x

வேலூர் தாலுகா அலுவலகத்தில் நில நிர்வாக ஆணையர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

வேலூர்


வேலூர் தாலுகா அலுவலகத்தில் நில நிர்வாக ஆணையர் நாகராஜன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தாலுகா அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் பட்டா வழங்குதல், சான்றிதழ் வழங்குதல் போன்ற செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார். மேலும் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகளையும் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது கலெக்டர் குமாரவேல்பாண்டியன், உதவி கலெக்டர் பூங்கொடி, தாசில்தார் செந்தில்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story