தாசில்தார்கள் திடீர் பணியிட மாற்றம்


தாசில்தார்கள் திடீர் பணியிட மாற்றம்
x

மாவட்டத்தில் தாசில்தார்களை திடீரென பணியிட மாற்றம் செய்து கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவிட்டார்.

விருதுநகர்


மாவட்டத்தில் தாசில்தார்களை திடீரென பணியிட மாற்றம் செய்து கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவிட்டார்.

பணியிட மாற்றம்

அதன் விவரம் வருமாறு:-

ராஜபாளையம் தாசில்தாராக பணியாற்றும் சீனிவாசன், கலெக்டர் அலுவலக பேரிடர் மேலாண்மை துறை தனித்தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். பேரிடர் மேலாண்மை தனித்தாசில்தாராக பணியாற்றிய ராமச்சந்திரன் ராஜபாளையம் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருச்சுழி தாசில்தாராக பணியாற்றும் சிவகுமார், அருப்புக்கோட்டை சமூக பாதுகாப்பு திட்ட தனித்தாசில்தாராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பாண்டி சங்கர் ராஜா திருச்சுழி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தாராக பணியாற்றும் ராமசுப்பிரமணியன், வெம்பக்கோட்டை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வெம்பக்கோட்டை சமூக பாதுகாப்பு திட்ட தனித்தாசில்தார் ரங்கசாமி, ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் தாசில்தாராக பணியாற்றும் செந்திவேல் விருதுநகர் டாஸ்மாக் உதவி மேலாளராகவும், டாஸ்மாக் உதவி மேலாளராக பணியாற்றும் பாஸ்கரன் விருதுநகர் தாசில்தாராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


Next Story