திருவாரூர் நகரில் திடீர் மின்தடை


திருவாரூர் நகரில் திடீர் மின்தடை
x

திருவாரூர் நகரில் திடீர் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காலை முதல் மாலை வரை கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது.இதனால் அப்பகுதி மக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்த்து வீடுகளிலேயே முடங்கினர். இந்த நிலையில் திருவாரூர் நகரில் 6.30 மணியில் இருந்து தொடர் மின் தடை ஏற்பட்டது. பனகல் சாலை, தெற்கு வீதி, வடக்கு வீதி, மடப்புரம், மருதப்பட்டினம், காட்டுக்காரத் தெரு உள்ளிட்ட நகரின் பெரும்பாலான பகுதிகளில் மாலை 6.30 மணி முதல் இரவு 8.45 வர மின்தடைஏற்பட்டது.இந்த திடீர் மின்தடையால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதுகுறித்து மின்வாரிய ஊழியர்களிடம் கேட்டபோது, நகரில் உள்ள ஒரு மின்மாற்றியில் உயரழுத்தம் காரணமாக பழுது ஏற்பட்டது.இந்த பழுதை உடனே சீரமைக்கப்பட்டது. மாணவர்கள் தேர்வு காலம் என்பதால் மின்தடை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.


Next Story