மேட்டூர் கிறிஸ்தவ ஆலயத்தில் திடீர் போராட்டம்
மேட்டூர் கிறிஸ்தவ ஆலயத்தில் ஒரு பிரிவினர் திடீரென காத்திருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்
மேட்டூர்:
மேட்டூரில் புனித மரியன்னை கிறிஸ்தவ ஆலயத்துக்கு நேற்று காலையில் கிறிஸ்தவர்கள் வழிபாட்டுக்கு வந்தனர். அப்போது ஒரு பிரிவினர் ஆலயம் முன்பு அமர்ந்து திடீரென காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், இன்ஸ்பெக்டர் சுப்ரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இரு தரப்பையும் சமாதானம் செய்தனர்.
போராட்டம் நடத்தியவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய போது, ஆலய பங்குதந்தையாக புணிபுரிந்து வரும் குருசடி சகாயரானை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கூறினர். அதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பிறகு இரு தரப்பினரையும் சமரசப்படுத்தி போலீசார் கலைந்து போக செய்தனர். இந்த திடீர் போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story