திருச்செந்தூரில் மாணவர் இயக்கத்தினர் திடீர் போராட்டம்
திருச்செந்தூரில் சாலையில் கழிவுநீர்ஓடுவதை கண்டித்து மாணவர் இயக்கத்தினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் செல்லும் பிரதான சாலையான நவல்பழச்சாலை தெருவில் நேற்று கழிவுநீர் தொட்டி நிரம்பி சாலையில் சாக்கடை நீர் ஆறாக ஓடியது. இதையடுத்து, நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தமிழக மாணவர் இயக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இபபோராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story