மதுரை நகரில் திடீர் சோதனை: ஆயுதங்களுடன் இருந்த 9 ரவுடிகள் கைது -குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் சிறை; போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

மதுரை நகரில் திடீர் சோதனை:  ஆயுதங்களுடன் இருந்த 9 ரவுடிகள் கைது -குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் சிறை; போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
x

மதுரை நகரில் ரவுடிகள் வீட்டில் திடீர் சோதனை செய்ததில் ஆயுதங்களுடன் இருந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர். குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை

ரவுடிகள் வீட்டில் திடீர் சோதனை

மதுரை நகரில் ரவுடிகள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர் உத்தரவிட்டுள்ளார். எனவே போலீசார் நகரில் உள்ள ரவுடிகள் பட்டியல் தயார் செய்தனர். அதன்படி இங்கு மட்டும் 400 ரவுடிகள் வசிப்பது தெரியவந்தது. எனவே அந்த ரவுடிகளின் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்துவது என்று போலீசார் முடிவு செய்தனர்.

அதன்படி கடந்த 5-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 400 ரவுடிகளின் வீடுகளிலும் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஜெய்ஹிந்துபுரம், திடீர்நகர், கூடல்புதூர், அண்ணாநகர், திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 9 ரவுடிகளின் வீட்டில் இருந்து 5 பெரிய வாள், 2 கத்தி, 1 அரிவாள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

9 பேர் ஆயுதங்களுடன் கைது

மேலும் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த பாலாஜி, கார்த்திகேயன் என்ற மெண்டல் கார்த்திக், கருப்பையா என்ற போதகர், சரவணன், நூர்கான், கார்த்திக், விக்னேஸ்வரன் என்ற பெயிண்டர் விக்கி, பழனிக்குமார், மணிகண்டன் என்ற உசிலை மணி ஆகிய 9 ரவுடிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தவிர தலைமறைவாக உள்ள ரவுடிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

இது குறித்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர் கூறுகையில், மதுரை மாநகரில் ரவுடிகளின் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக கண்காணிக்க உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்ற செயல்களில் மீண்டும் ஈடுபடும் ரவுடிகள் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றார்.

Next Story