மதுரை நகரை குளிர்வித்த திடீர் மழை-வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
மதுரை நகரில் நேற்று திடீர் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மதுரை நகரில் நேற்று திடீர் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வெயிலின் தாக்கம்
மதுரையில் கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் வாட்டி வதைத்தது. இதனால், நாளுக்கு நாள் வெயிலின் தாக்கமும் அதிகமாக இருந்தது. தினமும் 100 டிகிரியை தாண்டி வெப்பநிலை பதிவானதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
திடீர் மழை
தற்போதும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது. இதனால், பகல் முழுவதும் கொளுத்திய வெயிலால் இரவு நேரங்களில் அதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
இந்த நிலையில் நேற்றும் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் இருந்தது. ஆனால், மாலை நேரம் செல்ல, செல்ல மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டது. இரவு 7 மணியளவில் மதுரையில் நகர் பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழையானது ½ மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. இதனால், பகல் நேரத்தில் இருந்த வெப்பம் தணிந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று விடுமுறை தினம் என்பதால், நகர் பகுதியில் பெய்த மழையால் பெரியார் பஸ் நிலையம், கோரிப்பாளையம், காளவாசல் போன்ற இடங்களில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுபோல், அவ்வப்போது மின்தடையும் ஏற்பட்டது.