அறுவடை நேரத்தில் பெய்த திடீர் மழை


அறுவடை நேரத்தில் பெய்த திடீர் மழை
x
தினத்தந்தி 24 Jan 2023 12:15 AM IST (Updated: 24 Jan 2023 2:38 PM IST)
t-max-icont-min-icon

நாகையில் நேற்று திடீரென மழை பெய்தது. சம்பா அறுவடை நேரத்தில் மழை பெய்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நாகப்பட்டினம்

நாகையில் நேற்று திடீரென மழை பெய்தது. சம்பா அறுவடை நேரத்தில் மழை பெய்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சுட்டெரித்த வெயில்

நாகை மாவட்டத்தில் நடப்பாண்டில் 1 லட்சத்து 65 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பல்வேறு இடங்களில் நெல் அறுவடை பணிகளில் விவசாயிகள் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டும் இல்லாத வகையில், நாகை மாவட்டத்தில் நெற்பயிர்கள் நன்கு வளர்ந்துள்ளது. நாகையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்ததால் அறுவடை செய்த நெல்லை, சாலையில் கொட்டி காயவைத்து வந்தனர்.

திடீர் மழை

இந்த நிலையில் நாகை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று திடீரென மழை பெய்தது. விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை சாலையில் கொட்டி காய வைத்துக் கொண்டிருக்கும் பொழுது, பெய்த மழையால் விவசாயிகள் கவலை அடைந்தனர். தொடர்ந்து பெரிய தார்ப்பாய்கள் மூலம் நெல் மணிகளை மூடினர். அறுவடை நேரத்தில் திடீரென பெய்த இந்த மழையால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

விவசாயிகள் வேதனை

இந்த மழை தொடர்ந்தால் அறுவடை பணிகள் பாதிக்கப்படும் என்றும், இதனால் நஷ்டம் ஏற்படும் என்றும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.


Next Story