சீர்காழி பகுதியில் திடீர் மழை
சீர்காழி பகுதியில் திடீர் மழை பெயத்தால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
மயிலாடுதுறை
சீர்காழி:
தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. இந்த தாக்கத்திலிருந்து காத்துக் கொள்ள பொதுமக்கள் தற்பொழுது குளிர் பிரதேசங்கள், நீர்வீழ்ச்சி, சுற்றுலா தளங்கள், பொழுதுபோக்கு இடங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வருகின்றன. மேலும் கோடை வெயில் தாக்கத்தை தணிக்கும் வகையில் பழங்கள், குளிர்பானங்கள், வெள்ளரிக்காய்,மோர் உள்ளிட்டவைகளை அருந்தி தற்காத்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று சீர்காழி பகுதியில் சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோவில், தென்பாதி, திருமுல்லைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென பரவலான மழை பெய்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story