தஞ்சையில் திடீர் மழை


தஞ்சையில் திடீர் மழை
x

தஞ்சையில் நேற்று திடீரென மழை பெய்தது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

அக்னி நட்சத்திர காலம் நிறைவடைந்த பிறகு வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திர காலத்தில் கொளுத்துவதை போல் வெயில் கொளுத்தியது. இதனால் பகல் நேரங்களில் அனல்காற்று வீசியது. இரவு நேரத்தில் மின்விசிறிக்கு கீழ் படுத்து இருந்தாலும் வெப்பக்காற்று தான் வீசியது. இதனால் மழையை எதிர்பார்த்து மக்கள் இருந்தனர்.

மழை பெய்தது

இந்தநிலையில் குமரிக்கடல் பகுதிகளின் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்து இருந்தது. தஞ்சை மாவட்டத்தில் நேற்றுகாலை முதல் மாலை வரை வெயில் கொளுத்தியது.

தஞ்சை மாவட்டத்தில் மழை பெய்யும் என அறிவிக்கப்படவில்லை என்றாலும் இரவு 7.30 மணிக்கு மேல் திடீரென குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. இதனால் மழை பெய்யுமோ? என மக்கள் எதிர்பார்த்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் சிறிதுநேரத்தில் திடீரென மழை பெய்தது. இந்த மழை ½ மணிநேரம் பெய்தது. இந்த மழையினால் பூமி நனைந்து இரவில் குளிர்ந்த காற்று வீசியது. இதேபோல, திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், நாஞ்சிக்கோட்டை ஆகிய பகுதிகளிலும் நேற்று மழை பெய்தது. மழையின் காரணமாக பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது.






Next Story