தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை திடீர் மழை


தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை திடீர் மழை
x

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை திடீர் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் நேற்று மாலை திடீரென மழை பெய்தது. இது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெயில்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 4-ந் தேதி அக்கினி நட்சத்திரம் தொடங்கியது. அன்று முதல் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. ஆனாலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, புயல் காரணமாக அவ்வப்போது லேசான சாரல் மழையும், சில இடங்களில் பலத்த மழையும் பெய்தது. இதனால் அக்கினி வெயிலின் தாக்கத்தை மக்கள் சமாளித்து தப்பினர். கடந்த சில நாட்களாக பகலில் கடும் வெயிலும், மாலையில் இதமான சூழலும் நிலவி வந்தது. இந்த நிலையில் கடந்த 28-ந் தேதியுடன் அக்கினி நட்சத்திரம் விடைபெற்றது.

மழை

இதனால் வெயில் தாக்கம் குறையத் தொடங்கி உள்ளது. நேற்று மதியம் வரை வெயில் அடித்தது. மாலை 3 மணி அளவில் திடீரென மேகம் திரண்டது. தொடர்ந்து 3.30 மணி முதல் மிதமான மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 4 மணி வரை பெய்த மழையால் வெயில் தணிந்து இதமான சூழல் நிலவியது. மழையால் சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றது. இந்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story