அணை மின்நிலையத்தில் திடீர் பழுது மேட்டூரில் மின்சார வினியோகம் தடைபட்டது


அணை மின்நிலையத்தில் திடீர் பழுது   மேட்டூரில் மின்சார வினியோகம் தடைபட்டது
x

அணை மின்நிலையத்தில் திடீர் பழுது ஏற்பட்டதால் மேட்டூரில் மின்சார வினியோகம் தடைபட்டது.

சேலம்

மேட்டூர்,

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அணையை ஒட்டி அமைந்துள்ள அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த மின் நிலையங்கள் வழியாக திறந்து விடப்படும் தண்ணீரின் மூலம் மின்சார உற்பத்தி நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் காலையில் அணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்த மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் மேட்டூர், கொளத்தூர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு வினியோகம் செய்யபடுகிறது. இந்த மின்நிலையத்தில் மின்சார உற்பத்தி தடைபட்டதால் மேட்டூரில் நேற்று அதிகாலை 4.30 மணி முதல் காலை 6 மணி வரை மின்சார வினியோகமும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story