இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்
தூத்துக்குடி ஆவுடையார்புரத்தில் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி ஆவுடையார்புரம் குடியிருப்பு பகுதியில் சுகாதார வளாகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து நேற்று இந்து முன்னணியினர் திடீர் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.
இந்து முன்னணியினர் சாலைமறியல்
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஆவுடையார்புரம் பகுதியில் மாநகராட்சி சார்பில் பொது சுகாதார வளாகம் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொர்பாக மாநகராட்சி அலுவலகத்திலும் அப்பகுதி மக்கல் தொடர்ந்து கோரிக்கை மனு கொடுத்தனர். நேற்று இந்த கோரிக்கையை வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் இந்து முன்னணி மாநகர தலைவர் இசக்கிமுத்துக்குமார் தலைமையில் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் அறிந்த மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர், தூத்துக்குடி மாநகராட்சி மேயர், மற்றும் ஆணையாளரை அவர்கள் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் நாராயண் ராஜ் மற்றும் ஆவுடையார்புரம் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.