ஆறுமுகநேரியில் பெண்கள் திடீர் சாலை மறியல்
ஆறுமுகநேரியில் பெண்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து 1-வது வார்டு பகுதியான பெருமாள்புரம் பகுதி மக்கள், பெண்களுடன் நேற்று ஊர் தலைவர் கருப்பசாமி தலைமையில் திடீரென காலிகுடங்களுடன் குடிதண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து பாதித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி கணேசன், துணை தலைவர் கல்யாணசுந்தரம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஓரிரு நாட்களில் ஆழ்துளை கிணறு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட அப்பகுதி மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
Related Tags :
Next Story