ஒப்பந்த பணியாளர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்


ஒப்பந்த பணியாளர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 7 April 2023 12:15 AM IST (Updated: 7 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவில் மாநகராட்சியில் ஒப்பந்த முறையில் ஏராளமானோர் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் தங்களுக்கு கடந்த சில மாதங்களாக ஒப்பந்ததாரர்கள் சரியாக சம்பளம் வழங்கவில்லை எனவும், உடனே சம்பளத்தை வழங்க வேண்டும் என குற்றம்சாட்டினர்.

இந்தநிலையில் நேற்று கோரிக்கையை வலியுறுத்தி ஒப்பந்த பணியாளர்கள் திடீரென நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் மாநகர நல அதிகாரி ராம்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் இதுபற்றி பேசுவதாகவும், உரிய சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் கூறினர். இதனை தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தை ஒப்பந்த பணியாளர்கள் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story