பா.ஜ.க.வினர் திடீர் மறியல்; 47 பேர் மீது வழக்கு


பா.ஜ.க.வினர் திடீர் மறியல்; 47 பேர் மீது வழக்கு
x

பா.ஜ.க.வினர் திடீர் மறியலில் ஈடுபட்டது தொடர்பாக 47 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருச்சி

மணப்பாறை:

திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் அருகே உள்ள செவக்காட்டூர் பகுதியில் நேற்று முன்தினம் ஒருவரின் இடத்தில் மற்றொருவர் அனுமதியின்றி மண் கொட்டியபோது பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் இரு தரப்பை சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அந்த பகுதியில் கனிமவள கொள்ளை தொடர்ந்து நடைபெறுவதாகவும், அதை தட்டிக்கேட்ட பா.ஜ.க. தரவு தள மேலாண்மை பிரிவு மாவட்ட துணைத் தலைவர் லோகநாதனை ஒரு தரப்பினர் தாக்கியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நிலத்தின் உரிமையாளருக்கே தெரியாமல் செங்கல் சூளை உரிமையாளருக்கு அனுமதி வழங்கிய வருவாய்த்துறையினர் மீதும் கடும் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும் பா.ஜ.க. திருச்சி மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன் தலைமையில் மணப்பாறை, நகரத் தலைவர் கோல்டு கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் மணப்பாறை பஸ் நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். மேலும் கோஷமிட்டப்படி வந்த பா.ஜ.க.வினர் பஸ் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக பா.ஜ.க.வினர் 47 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story