சக்கரத்தில் திடீர் பழுது: சென்னை ரெயில் நடுவழியில் நிறுத்தம்


சக்கரத்தில் திடீர் பழுது: சென்னை ரெயில் நடுவழியில் நிறுத்தம்
x

கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு தினமும் மாலை 5.50 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

நாகர்கோவில்,

கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு தினமும் மாலை 5.50 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நேற்று மாலை புறப்பட்டு நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு 6.10-க்கு வந்தது.

பிறகு அங்கிருந்து புறப்பட்டு சுமார் 20 மீட்டர் தூரம் சென்ற போது ரெயில் என்ஜினின் அடிப்பகுதியில் இருந்து கம்பிகள் உரசும் சத்தம் கேட்டது. உடனே இதனை கவனித்த டிரைவர் சுதாரித்துக் கொண்டு ரெயிலை நிறுத்தினார். இதனால் நடுவழியில் ரெயில் நின்றது. பின்னர் என்ஜின் டிரைவர் கீழே இறங்கி ரெயில் சக்கரம் பகுதியை ஆய்வு செய்தார். அப்போது என்ஜினில் உள்ள சக்கரத்தில் பழுதானது தெரியவந்தது. அதாவது சக்கரத்தில் இணைக்கப்பட்டிருந்த ஸ்பிரிங் சேதமடைந்திருந்தது. உடனே ரெயில்வே ஊழியர்கள் பழுதை சரி செய்தனர்.

இதனை தொடர்ந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் 20 நிமிடம் தாமதமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றது. சரியான நேரத்தில் பழுதானதை டிரைவர் கவனித்ததால் பெரும் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது.


Next Story