திடீரென தீப்பற்றி எரிந்த கார்


திடீரென தீப்பற்றி எரிந்த கார்
x

ஏலகிரி மலையில் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரிமலையில் மேட்டுக்கணியூர் அருகில் நிலாவூர் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் தாமோதரன் விடுதி நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து அவரது விடுதிக்கு காரில் சென்றார். அங்கு காரை நிறுத்தியபோது திடீரென கார் தீப்பற்றி எரியத்தொடங்கியது. உடனே காரில் இருந்தவர்கள் இறங்கிவிட்டனர். தீ மளமளவென பரவி கார் முழுவதும் எரிந்தது. அங்கிருந்தவர்கள் தீயை அணைத்தனர். ஆனாலும் கார் முழுவதும் எரிந்து எலும்புக் கூடாக மாறியது.

இதுகுறித்து ஏலகிரி மலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கோதண்டம் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.


Next Story