தீராத வயிற்று வலியால் அவதி: 2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை


தீராத வயிற்று வலியால் அவதி: 2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை
x

தீராத வயிற்று வலியால் அவதியடைந்த 2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே மணகெதி காலனி தெருவை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி (வயது 31). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ரம்யா (27). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில், ரம்யா தீராத வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். இதற்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த ரம்யா மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடையார்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரம்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story