பழனி கோவிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்க கவுந்தப்பாடியில் ரூ.49¾ லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை கொள்முதல்
பழனி கோவிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்க கவுந்தப்பாடியில் ரூ.49¾ லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டது.
கவுந்தப்பாடி
பழனி கோவிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்க கவுந்தப்பாடியில் ரூ.49¾ லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டது.
நாட்டு சர்க்கரை
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாட்டுச்சர்க்கரை ஏலம் நடைபெற்றது. கவுந்தப்பாடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2,749 மூட்டை நாட்டு சர்க்கரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தார்கள்.
இதில் 60 கிலோ மூட்டை முதல் ரக நாட்டு சர்க்கரை (திடம்) குறைந்தபட்ச விலையாக 2,520 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 2,530 ரூபாய்க்கும், சராசரி விலையாக 2,525 ரூபாய்க்கும் ஏலம் போனது.
மீடியம் ரகம் நாட்டு சர்க்கரை குறைந்தபட்ச விலையாக 2,420 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 2,430 ரூபாய்க்கும், சராசரி விலையாக 2,425 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம் 1 லட்சத்து 25 ஆயிரத்து 700 கிலோ எடையுள்ள நாட்டுச்சர்க்கரை 48 லட்சத்து 61 ஆயிரத்து 70 ரூபாய்க்கு ஏலம் போனது.
பஞ்சாமிர்தம் தயாரிக்க...
இதேபோல் உருண்டை வெல்லம் முதல் தரம் 30 கிலோ சிப்பம் 1,560 ரூபாய்க்கு விற்றது. மொத்தம் 2,100 கிலோ எடையுள்ள உருண்டை வெல்லம் 1 லட்சத்து 9 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையானது.
நாட்டுச்சர்க்கரை, உருண்டை வெல்லம் இரண்டையும் பழனி கோவில் நிர்வாகம் மொத்தமாக பஞ்சாமிர்தம் தயாரிக்க 49 லட்சத்து 70 ஆயிரத்து 270 ரூபாய்க்கு கொள்முதல் செய்தது.