நெற்றியில் நாமம் இட்டு விவசாயிகள் போராட்டம்


நெற்றியில் நாமம் இட்டு விவசாயிகள் போராட்டம்
x

திருமண்டங்குடி சர்க்கரை ஆலை முன்பு நெற்றியில் நாமம் இட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

கபிஸ்தலம்;

திருமண்டங்குடி சர்க்கரை ஆலை முன்பு நெற்றியில் நாமம் இட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சர்க்கரை ஆலை

தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் தனியார். சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் ரூ.300 கோடி முழுவதையும் திரும்பச் செலுத்த வேண்டும் ஆலையைத் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் சர்க்கரை ஆலை முன்பு கடந்த நவம்பர் 30-ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

பட்டை நாமம்

போராட்டத்தின் 50-வது நாளான நேற்று, விவசாயிகள் கோவிந்தா, கோவிந்தா, என கோஷம் எழுப்பி நெற்றியில் பட்டை நாமம் இட்டுகையில் ஜாலரா மணி அடித்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினா். போராட்டத்துக்கு போராட்டக்குழு செயலாளர் நாக.முருகேசன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story