குப்பைக்கு வைத்த தீ 2 ஏக்கர் கரும்புகளை நாசமாக்கியது
மடத்துக்குளம் அருகே ஜோத்தம்பட்டி பகுதியில் குப்பையில் வைத்த தீ கரும்புக்காட்டில் பரவியதால் சுமார் 2 ஏக்கர் கரும்புப்பயிர்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தின் மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடக்கழிவு மேலாண்மை
மடத்துக்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட ஜோத்தப்பட்டி ஊராட்சியில் வீடுகளில் குப்பைகளை சேகரித்து சாலை ஓரங்களில் குவித்து வைக்கும் அவலம் அரங்கேறி வருகிறது. அதுமட்டுமல்லாமல் அந்த குப்பைகளில் அவ்வப்போது தீ வைத்து கொளுத்தி குப்பை மலையை கரைக்கும் நிகழ்வுகளும் நடைபெறுகிறது. இதனால் சுகாதார சீர்கேடுகள் மட்டுமல்லாமல் காற்று மாசு ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஜோத்தம்பட்டி ஆஸ்பத்திரி மேடு பகுதிக்கு அருகில் ஈஸ்வரன் என்பவருக்கு சொந்தமான நிலத்துக்கு அருகில் சாலை ஓரம் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பைகளிலுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் விளை நிலங்களுக்குள் புகுந்து விளைநிலங்கள் பாழாகி வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தும் தொடர்ச்சியாக இந்த பகுதியில் ஊராட்சி நிர்வாகத்தால் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது.
அதிகாரிகள் ஆய்வு
இந்த நிலையில் நேற்று மதியம் குப்பைகளில் கொழுந்து விட்டு எரிந்த தீ காற்றின் வேகத்தால் அருகிலிருந்த ஈஸ்வரனின் கரும்புக் காட்டுக்கு பரவியது. உடனடியாக அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் உதவியுடன் தீயை அணைத்தனர். அதற்குள் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 2 ஏக்கர் கரும்புப் பயிர்கள் தீயில் எரிந்து நாசமானது. மேலும் சொட்டு நீர்ப்பாசனக் குழாய்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி வீணாகியது.
இதனையடுத்து வேளாண்மை அலுவலர் இந்திரா பிரியதர்ஷினி, வேளாண்மை உதவி அலுவலர் சிம்சோன், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை பீல்ட் ஆபீசர் மணி, ஜோத்தம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சர்மிளா நாயகி ஆகியோர் சேதம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
ஜோத்தம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தால் ஏற்பட்ட தீ விபத்து குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈஸ்வரன் உள்ளிட்ட விவசாயிகள் திரண்டு வந்து கணியூர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு