விருத்தாசலத்தில்தனியார் சர்க்கரை ஆலை தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விருத்தாசலத்தில்தனியார் சர்க்கரை ஆலை தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Jan 2023 12:15 AM IST (Updated: 6 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் தனியார் சர்க்கரை ஆலை தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

விருத்தாசலம்,

கடலூர் மாவட்டம் இறையூர் தனியார் சர்க்கரை ஆலை அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று விருத்தாசலம் கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஐ.என்.டி.யு.சி. தலைவர் அழகேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பரமசிவம், சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு ஆலை மூடப்பட்டதால் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக எந்த ஒரு நிவாரணமும் வழங்காத சர்க்கரை ஆலையை கண்டித்தும், கூட்டுறவு சங்க கணக்கு வழக்குகளை மறைத்து ஊழல் நடைபெற்றதை கண்டித்தும், தலைவர், செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பண பலன்களை உடனடியாக வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். அதன்பிறகு தொழிற்சங்கத்தினர் துணை பதிவாளர் அலுவலகத்தில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மனு அளித்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story