சர்க்கரை திருப்பாவாடை விழா


சர்க்கரை திருப்பாவாடை விழா
x

பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் சர்க்கரை திருப்பாவாடை விழா நடந்தது.

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் வட்டம் பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் சாமுண்டீஸ்வரி அம்மன் தனிசன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை தோறும் சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னதியில் எலிக்கடிக்கு வேர் கட்டப்பட்டு வருகிறது. சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் சர்க்கரை திருப்பாவாடை விழா நடந்தது. இதனையொட்டி சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அம்மன் சன்னதியில் சர்க்கரை பொங்கல் படைக்கப்பட்டு நெய் ஊற்றப்பட்டிருந்தது. அப்போது சாமுண்டீஸ்வரி அம்மனை பக்தர்கள் நெய்க்குள தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் மாதவன், செயல்அலுவலர் பிரபாகரன் மற்றும் பலர் செய்திருந்தனர்.


Next Story