கரும்பு விவசாயிகள் சங்க கூட்டம்
மணல்மேட்டில் கரும்பு விவசாயிகள் சங்க கூட்டம் நடந்தது
மணல்மேடு;
மணல்மேடு தலைஞாயிறு பகுதியில் உள்ள என்.பிகே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலையானது மயிலாடுதுறை, நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கான ஒரே கூட்டுறவு சர்க்கரை ஆலையாக உள்ளது. பூட்டப்பட்ட இந்த ஆலையை திறக்க அரசு முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த நிலையில் ஆலையின் கரும்பு விவசாயிகள் சங்கமான தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் ஆலைமட்ட அளவிளான கூட்டம் மணல்மேட்டில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் தங்ககாசிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5ஆயிரம் வழங்க வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் மாநில அரசு விலையை சேர்த்து கரும்புக்கான விலையை அறிவிக்க வேண்டும், கரும்பு பிழிதிரனுக்கு 8.5 சதவீதம் விலை அறிவிக்க வேண்டும். என்.பி.கே.ஆா்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலையை மாநில அரசு எத்தனால், மின் உற்பத்தி செய்யும் அளவுக்கு ேமம்படுத்தி திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.