கரும்பு விவசாயிகள் சங்க பாதுகாப்பு மாநாடு


கரும்பு விவசாயிகள் சங்க பாதுகாப்பு மாநாடு
x

மூங்கில்துறைப்பட்டில் கரும்பு விவசாயிகள் சங்க பாதுகாப்பு மாநாடு நடந்தது.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு:

மூங்கில்துறைப்பட்டில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு கரும்பு விவசாய சங்க தலைவர் கதிர்கோபால் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் எத்திராஜ், ஜெயராமன், பாலு, ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் பலராமன் வரவேற்றார். இதில் கள்ளக்குறிச்சி 2-வது கூட்டுறவு சர்க்கரை ஆலை குருநாதன், செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ஜோதிராமன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சகாதேவன், கண்ணன், பெருமாள், நாராயணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், வெட்டு கூலியை ஆலை நிர்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும், இணை மின் நிலைய திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், உரத் தட்டுப்பாட்டை நீக்க ஆலை நிர்வாகமே நேரடியாக கரும்பு விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்க வேண்டும், தற்போது உள்ள பயிர் காப்பீடு திட்டத்தை ரத்து செய்து தனிநபர் பயிர் காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கு கோட்டம் வாரியாக கரும்பு பயிறுக்கு மருந்து தெளிப்பதற்கு ட்ரோன் வழங்க வேண்டும், ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதத்தில் கரும்பு அரவையை தொடங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் தமிழ்நாடு கரும்பு விவசாய சங்க துணை தலைவர் புவனேஸ்வரன் நன்றி கூறினார். முன்னதாக ஆலை வளாகத்தில் இருந்து விவசாயிகள் பேரணியாக மாநாடு நடக்கும் மண்டபத்திற்கு வந்தடைந்தனர்.


Next Story