கரும்பு சாகுபடியில் மஞ்சள் நோய் தாக்குதல்


கரும்பு சாகுபடியில் மஞ்சள் நோய் தாக்குதல்
x

அய்யம்பேட்டை அருகே கரும்பு சாகுபடியில் மஞ்சள் நோய் தாக்குதல் உள்ளதால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

அய்யம்பேட்டை,

அய்யம்பேட்டை அருகே கரும்பு சாகுபடியில் மஞ்சள் நோய் தாக்குதல் உள்ளதால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரும்பு சாகுபடி

தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் வீரமாங்குடி, தேவன்குடி, சோமேஸ்வரபுரம், மணலூர், கணபதி அக்ரகாரம் உள்ளிட்ட கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. சர்க்கரை ஆலைக்கு அனுப்புவதற்காகவும், வெல்லம் காய்ச்சுவதற்காகவும் இந்த பகுதியில் விவசாயிகள் பல ஆண்டுகளாக கரும்பு நடவு செய்து வருகின்றனர். இதற்காக ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை விவசாயிகள் செலவு செய்கின்றனர்.

மஞ்சள் நோய் தாக்குதல்

தற்போது இந்த பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கரும்பில் புதிய வகை மஞ்சள் நோய் பரவி உள்ளது.இந்த நோய் தாக்குதலால் கரும்புகள் வளர்ச்சி இல்லாமல் அப்படியே குத்தாக நின்று விட்டது. இயற்கை, செயற்கை பூச்சிக்கொல்லிகளை தெளித்தும் இந்த நோயை குணப்படுத்த முடியவில்லை. இதனால் லட்சக்கணக்கில் செலவு செய்து கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீட்டு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story