விதைக்கரும்பு தயாரிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரம்


விதைக்கரும்பு தயாரிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரம்
x
திருப்பூர்


தளி பகுதியில் விதை கரும்பு தயாரிப்பில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறனர்.

விதைக்கரும்பு தயாரிக்கும் பணி

அறுசுவைகளில் ஒன்றான இனிப்புக்கு அடிமையாகாதோர் எவருமில்லை. அதிலும் இனிப்புடன் இன்பத்தையும் சேர்த்து தரக்கூடிய கரும்பை முகமலர்ச்சியோடு சுவைக்கவே அனைவரும் விரும்புவர். மனதுக்குப் பிடித்த கரும்பை முன்பட்டம், நடுப்பட்டம், பின்பட்டம், தனிப்பட்டம் என டிசம்பர் முதல் மே மாதம் வரையிலும் பிரித்து நடவு செய்யப்படுகிறது. ஆண்டு பயிரான இதை பராமரிப்பதே விவசாயிகளுக்கு சவாலான ஒன்றாகும்.

மண் அணைத்தல், சோகை உரித்தல், உரமிடுதல், விட்டம் கட்டுதல், களை எடுத்தல் என அடுத்தடுத்த கட்டங்களாக தீவிர கவனம் செலுத்தினால் மட்டுமே எதிர்பார்த்த வளர்ச்சி மற்றும் விளைச்சலை எட்ட முடியும். அதிக விளைச்சலை ஈட்டுவதற்கு தரமான விதைகரணையின் பங்கு முக்கியமானதாகும். சுமார் ஆறு மாத காலம் வளர்ந்த கரும்புகளை தேர்ந்தெடுத்து விதைகரும்பு தயாரிக்கப்படுகிறது.

நோய்கள் குணமாகும்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

களிமண் பாங்கான பூமியில் செழித்து வளரக்கூடிய பயிர்களில் கரும்பு முதன்மையானதாகும். அந்தந்த பகுதியில் நிலவுகின்ற தட்பவெட்ப நிலைக்கு ஏற்றாற்போல் விளைச்சலும், வளர்ச்சியும் இருக்கும். முறையான பராமரிப்புக்கு பின்பு கரும்பில் இருந்து பழுப்பு மற்றும் வெள்ளை சர்க்கரை, தேன்பாகு, அச்சு மற்றும் உருண்டை வெள்ளம், கரும்புச்சாறு ஆகியவை உற்பத்தி செய்யப்படுகிறது.

இதன் மூலம் ஏராளமானோர் தொழில் வாய்ப்புகளையும் பெற்று வருகின்றனர். கரும்பை உணவாக எடுத்துக் கொள்வதன் மூலம் மஞ்சள் காமாலை, சிறுநீரக கற்கள், தொற்றுநோய்கள், நீரிழிவு உபாதை, புற்றுநோய், நீர்வறட்சி, சளி இருமல் மற்றும் தொண்டை வலி உள்ளிட்ட நோய்கள் செலவில்லாமல் குணமாவதுடன் உடம்பை வலுவாக்கும் என்பதால் கரும்பு தின்ன கூலி வேண்டுமா என்று முன்னோர்கள் மறைமுகமாக சொவிதைக்கரும்பு தயாரிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரம்ல்லி வைத்தனர்.

மவுசு கூடி வருகிறது

தற்போது வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரைக்கு நாளுக்கு நாள் மவுசு கூடி வருகிறது. நாட்டு சர்க்கரையில் செய்யப்பட்ட தின்பண்டங்களும் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் சில்லறை விற்பனைக் கடைகளை நிறுவுவதில் தொழில் முனைவோர் முனைப்பு காட்டி வருகின்றனர். இந்த நிகழ்வு கரும்பு சாகுபடியில் ஈடுபட்டு வருகின்ற விவசாயிகளுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கின்றது. எனவே விதை கரும்பு உற்பத்தி மற்றும் நடவு செய்வதிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story