கோபி அருகே தூக்குப்போட்டு புதுமாப்பிள்ளை தற்கொலை
கோபி அருகே தூக்குப்போட்டு புதுமாப்பிள்ளை தற்கொலை
கடத்தூர்
கோபி அருகே உள்ள முருகன் புதூரை சேர்ந்தவர் மோகன் குமார் (வயது 30). கூலித்தொழிலாளி. கடந்த 4 மாதத்துக்கு முன்பு இவரும், கோபி அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்த கோமதி என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். மேலும் 2 பேரும் கோமதி வீட்டிலேயே வசித்தனர். மோகன் குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மோகன் குமார் மனமுடைந்து வீ்ட்டில் உள்ள விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மோகன்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.