காதல் திருமணத்தை கணவர் குடும்பத்தினர் ஏற்காததால்புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலைஓசூர் உதவி கலெக்டர் விசாரணை


காதல் திருமணத்தை கணவர் குடும்பத்தினர் ஏற்காததால்புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலைஓசூர் உதவி கலெக்டர் விசாரணை
x
கிருஷ்ணகிரி

சூளகிரி

சூளகிரி அருகே காதல் திருமணத்தை கணவர் குடும்பத்தினர் ஏற்காததால் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் திருமணம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா காளிங்கவரத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி மீனாட்சி (வயது21). கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தை சீனிவாசன் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் மீனாட்சி தனது பெற்றோர் வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில், காதல் திருமணத்தை கணவர் குடும்பத்தினர் ஏற்காததால் மனவேதனையில் இருந்த மீனாட்சி கடந்த 10-ந் தேதி மாலை விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதை கண்டு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் மீனாட்சியை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

உதவி கலெக்டர் விசாரணை

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மீனாட்சி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா விசாரணை நடத்தி வருகிறார். காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்ெகாலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story