தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை


தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
x
தினத்தந்தி 21 July 2023 1:00 AM IST (Updated: 21 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் தாலுகா பேகேப்பள்ளியை சேர்ந்தவர் பாபு (வயது 42). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார்.

இந்த நிலையில் மன உளைச்சல் காரணமாக கடந்த 19-ந் தேதி பாபு வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story