போடி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


போடி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 24 July 2023 2:30 AM IST (Updated: 24 July 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

போடி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

தேனி

போடி அருகே உள்ள கரையான்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 52). கூலித்தொழிலாளியான இவர், தனது மனைவியுடன் கேரளாவில் தங்கி வேலை செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த மாதம் சொந்த ஊருக்கு முருகன் வந்தார். அதன்பிறகு அவர் கேரளாவுக்கு செல்லவில்லை.

இதற்கிடையே அவர் தீராத வயிற்றுவலியால் அவதியடைந்து வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். ஆனால் வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட முருகன் கடந்த 20-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது விஷத்தை குடித்தார்.

இதில், மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் இறந்தார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story