இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை


இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 22 Aug 2023 1:00 AM IST (Updated: 22 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

சூளகிரி:

சூளகிரி அருகே புக்கசாகரத்தை சேர்ந்த சிவா மனைவி ரேவதி (வயது 25). இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது. ரேவதி நீண்ட காலமாக நுரையீரல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் ஏற்பட்ட மனவேதனையால் சூளகிரி அருகே அஞ்சாலம் கிராமத்தில் தனது தாய் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரேவதி இறந்தார். இதுகுறித்து, சூளகிரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story