திருமணமான 3 மாதங்களில்புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை


திருமணமான 3 மாதங்களில்புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 28 Aug 2023 1:00 AM IST (Updated: 28 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை:

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராம் பர்வேஷ்குமார் (வயது 21). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே தொட்டி நாயக்கனஅள்ளி பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். மேலும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவரது மனைவி, பீகார் மாநிலத்தில் இருந்தார். இந்த நிலையில் மனைவியை பிரிந்து வசித்து வந்த புது மாப்பிள்ளை ராம் பர்வேஷ்குமார் மன வருத்தத்தில் தனது வீட்டில் நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 3 மாதங்களில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story