ராயக்கோட்டை அருகே காதலியுடன் ஓடியதால்வாலிபரின் தந்தை விஷம் குடித்து தற்கொலைதாய்க்கு தீவிர சிகிச்சை


ராயக்கோட்டை அருகே காதலியுடன் ஓடியதால்வாலிபரின் தந்தை விஷம் குடித்து தற்கொலைதாய்க்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 10 Sept 2023 1:00 AM IST (Updated: 10 Sept 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

ராயக்கோட்டை அருகே காதலியுடன் ஓடியதால் வாலிபரின் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை:

ராயக்கோட்டை அருகே காதலியுடன் ஓடியதால் வாலிபரின் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காதல் விவகாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள மொல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 60). விவசாயி. இவருடைய மகன் தமிழ்செல்வன் (20). இவர் 16 வயதுடைய பிளஸ்-1 மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து கடந்த 4-ந் தேதி தமிழ்செல்வன் பள்ளி மாணவியுடன் வீட்டில் இருந்து வெளியேறினார். தங்களது மகள் ஓடி போனதை நினைத்து வருந்திய மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தமிழ்செல்வன் வீட்டுக்கு சென்று ஆத்திரத்தில் ஜன்னல், கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்ச்செல்வன் மற்றும் மாணவியை தேடி வருகின்றனர்.

தற்கொலை

இது ஒருபுறம் இருக்க மாணவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தமிழ்செல்வனின் தந்தை கோவிந்தன், தாய் சாலம்மாள் ஆகியோரை மிரட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த கோவிந்தன், மனைவி சாலம்மாள் ஆகியோர் கடந்த 7-ந் தேதி விஷம் குடித்தனர்.

இதையடுத்து உறவினர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கோவிந்தன் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். சாலம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோவிந்தன் மகள் மஞ்சுளா கொடுத்த புகாரின்பேரில் ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாபர் செரீப் வழக்குப்பதிவு செய்து 3 பேரை தேடி வருகிறார்.


Next Story