ஓசூரில்காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை
ஓசூரில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி
ஓசூர்
ஓசூர் பத்தலப்பள்ளியை சேர்ந்தவர் முகமது. இவரது மனைவி கவிதா (வயது23). இவர்கள் கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்தது. சம்பவத்தன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கவிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், திருமணமாகி ஒரு ஆண்டுக்குள் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story