வடமாநில ஊழியர் தற்கொலை
வடமாநில ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி
ராயக்கோட்டை:
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ராகேஷ்குமார் பிரதான் (வயது 32). கர்நாடக மாநிலம் பெங்களூரு ஜிகினியில் தங்கியிருந்து உத்தனப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் ராகேஷ்குமார் பிரதான் கடந்த 1½ ஆண்டுகளாக தனது சொந்த ஊருக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இதில் மனமுடைந்து காணப்பட்ட அவர் உத்தனப்பள்ளியில் உள்ள ஒரு ஓட்டல் அருகே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் உத்தனப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story