தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை


தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை
x
தினத்தந்தி 22 Sept 2023 1:00 AM IST (Updated: 22 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி

சூளகிரி:

சூளகிரி அருகே உள்ள ஏனுசோனை கிராமத்தை சேர்ந்தவர் மனோகர். இவருடைய மனைவி ஹரீஸ்மா (வயது 39). இவர் சூளகிரியில உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் ஹரீஸ்மா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story