Normal
மோகனூர் அருகே தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை
மோகனூர் அருகே தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல்
மோகனூர்:
மோகனூர் அருகே உள்ள கங்காநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 72). கூலித் தொழிலாளி. கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமசாமி விபத்தில் சிக்கினார். அதில் காயமடைந்த அவர் பூரண குணமாகவில்லை. இதனால் அவர் மனவேதனையில் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று அவர் வீட்டில் திடீரென தூக்குப்போட்டு கொண்டார். அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த தற்கொலை குறித்து மோகனூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தமிழழகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story