குழந்தைகள் இல்லாததால் மனமுடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை


குழந்தைகள் இல்லாததால் மனமுடைந்த  இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை  உதவி கலெக்டர் விசாரணை
x

வேலகவுண்டம்பட்டி அருகே குழந்தைகள் இல்லாததால் மனமுடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல்

பரமத்திவேலூர்:

வேலகவுண்டம்பட்டி அருகே குழந்தைகள் இல்லாததால் மனமுடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெயிண்டர்

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள இளநகர் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 50). பெயிண்டர். இவருடைய மகள் நளினி (23). இவருக்கும் மாசக்கல்பட்டி இளங்கோ நகர் பகுதியை சேர்ந்த ரகுபதி என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

ஆனால் இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. இதனால் நளினி கடந்த சில மாதங்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று நளினி வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்றவர் பின்னர் வெகு நேரமாகியும் வெளியில் வரவில்லை என்று தெரிகிறது.

உதவி கலெக்டர் விசாரணை

இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு சென்றபோது உள்பக்கம்‌ கதவு சாத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து கதவை உடைத்து‌ உள்ளே சென்று பார்த்தபோது நளினி சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

பின்னர் இதுகுறித்து வேகவுண்டம்பட்டி‌ போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் நளினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் இறந்துள்ளதால் இதுகுறித்து நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story