ஊஞ்சலூர் அருகே மதுபோதையில் மெக்கானிக் பட்டறை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை

ஊஞ்சலூர் அருகே மதுபோதையில் மெக்கானிக் பட்டறை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை
x

ஊஞ்சலூர் அருகே மதுபோதையில் மெக்கானிக் பட்டறை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை

ஈரோடு

ஊஞ்சலூர்

ஊஞ்சலூர் அருகே உள்ள சோளங்காபாளையம் மணப்பாளி பள்ளம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 36). இவர் கருமாண்டாம்பாளையத்தில் இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் மெக்கானிக் பட்டறை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி ராதாமணி (33) என்ற மனைவியும், 12 வயதில் ஒரு மகளும், 9 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கார்த்திக்குக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த அவர் மின்விசிறியில் போர்வையால் தூக்குப்போட்டுக்கொண்டார். இதை கண்டதும், அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று கார்த்திக்கை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு் ஏற்கனவே கார்த்தி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story